திமுகவுக்கு அதிர்ச்சி ! திருப்புமுனையை ஏற்படுத்திய அண்ணாமலை !

பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம், ISI தொடர்பு, இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பு என்று பல விஷயங்களை நேரடியாக பேசினாலும், தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்றும் பேசியது, மற்றும் கோவை ஜமாத்துக்கு வாழ்த்து ஆகியவை பல பத்திரிகையாளர்களை சிந்திக்க வைத்துள்ளது. தீவிரவாத செயல்களை பற்றி அதிகம் கூறாமல், அதேசமயம், பொதுவெளியிலிருந்தே பல முக்கிய தகவல்களை கூறி, திமுக அரசின் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திய பாங்கு, அண்ணாமலைக்கு பலரின் ஆதரவை பெற்றுத்தந்துள்ளது. இவ்வளவு பெரிய சதித்திட்டம் நடந்ததை, ஜிகாதி தீவிரவாத செயலை, முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது போல, சாதாரண கேஸ் வெடிப்பு என்று திமுக அரசு கூறிவருவது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை அண்ணாமலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஜிகாதி தீவிரவாத செயல்களை மற்றும் ஈரோடு/சேலம் பகுதிகளில் நடந்த கைது நடவடிக்கைகளை ஊடகங்களில் வெளியிடாமல் திமுக அரசு இருட்டடிப்பு செய்த விவகாரத்தை பாங்காக அண்ணாமலை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில், அண்ணாமலையின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு மைல்கல். இந்த அளவை தீர்க்கமான சிந்தனை, தெளிவான கருத்துக்களுடன் சிக்கலான பிரச்சனையை பேசும் திறன் கொண்ட வேறு ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இல்லை!
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS