கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட், பொறியியல் சேர்க்கைக்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு மற்றும் அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு தனியார் பயிற்சி மையங்களை நாடுகின்றனர். இந்த மையங்கள் தவறான, மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வெளியிடுவதாகவும், நியாயமற்ற தொழில் நடைமுறைகளில் ஈடுபடுவதாகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. இதுவரை, 24 பயிற்சி மையங்களுக்கு மொத்தம் 77.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. 49 பயிற்சி மையங்களுக்கு விளக்க நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தனியார் பயிற்சி மையங்கள் 100 சதவீதம் தேர்ச்சி அல்லது வேலை உறுதி போன்ற தவறான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்களை வெளியிடுவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறுவதாக உள்ளன. பயிற்சி மையங்கள் தங்கள் விளம்பரங்களில் துல்லியமான மற்றும் தெளிவான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும். விளம்பரங்களில் பொறுப்புத் துறப்பு தொடர்பான தகவல்களையும் பெரிய எழுத்துகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை மீறும் பயிற்சி மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS