ரஜினி இன்னும் கட்சியும் ஆரம்பிக்கவில்லை, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. ஆனாலும் தேர்தல் அரசியலில் போட்டியிடாமலே அவர் வென்றுவிட்டார் என்று சொல்லலாம்.
எப்படி?
பொதுவாக தேர்தல் அறிக்கையில், மக்கள் போராடும் விஷயங்கள் இடம் பெறும். தவிர கவர்ச்சிகரமான மக்கள் நலத்திட்டங்களையும் வாக்குறுதிகளாக கட்சிகள் அள்ளி வீசுவார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் விஷயங்களான ‘நீட் தேர்வு விலக்கு’, ‘கீழடி ஆய்வு’, ‘மீத்தேன் திட்டம் கேன்சல்’ போன்றவைகள் திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மக்கள் மத்தியில் எந்த ஒரு விவாதமும் இல்லாத இரண்டு விஷயங்கள் திமுக வாக்குறுதிகளாக இடம் பெற்றுள்ளன. ‘இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை’ மற்றும் ‘தென்னிந்திய நதிகள் இணைப்பு’ ஆகிய இரண்டும் கவனிக்கத்தக்க வாக்குறுதிகளாகி விட்டன! இந்த இரண்டு குறித்தும் மக்கள் மத்தியில் விவாதமோ, போராட்டங்களோ இல்லையே. பின்னர் ஏன் திமுக இதைச் சேர்த்தது?
அங்குதான் ரஜினிகாந்த் வருகிறார். சில மாதங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், “இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த பிரச்சனையை யாரும் கண்டுக்கவே இல்லை. கட்டாயம் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்,” என்றார். மற்றொரு சமயம், “தென்னிந்திய நதிகளை மட்டுமாவது முதலில் இணைக்க வேண்டும். தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்… என் வாழ்நாளில் இது நடக்க வேண்டும்,” என்றும் சொல்லியிருந்தார்.
தற்போது தேர்தலையொட்டி, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்த்து வைப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த். போட்டி போட்டு அதிமுகவும் திமுகவும் சொல்லி வைத்தாற்போல் தென்னிந்திய நதிகளை இணைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
இதைச் சொல்ல அதிமுகவுக்கு கொஞ்சமும் தகுதி இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜகவின் பினாமி ஆட்சியாக நடந்து கொண்டிருந்த கடந்த மூன்றாண்டுகளில் காவிரிப் பிரச்சனையையும் தீர்க்கவில்லை. ஆணையத் தீர்ப்பை மீறி கூடுதலாக அணை கட்ட மத்திய பாஜக அரசே அனுமதி கொடுத்துள்ளது. தென்னிந்திய நதிகள் இணைப்பு பற்றி மூச்சு கூட விடவில்லை. ரஜினிகாந்த் சொல்லி விட்டார் என்ற ஒரே காரணத்திற்காகவே அறிக்கையில் சேர்த்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.
சரி, திமுக மட்டும் சுயமாக சிந்தித்ததா என்ன? அவர்களும் ரஜினிகாந்த் சொன்னதாலேயே தென்னிந்திய நதிகள் இணைப்பு என வாக்குறுதியில் சேர்த்துள்ளார்கள். நதி நீர் இணைப்பு என்று ரஜினிகாந்த் பல வருடங்களாகச் சொல்லி வருகிறாரே. 1 கோடி ரூபாயை வங்கியில் டெப்பாசிட் கூட செய்துள்ளாரே. அப்போதெல்லாம் சேர்க்காமல் இப்போ சேர்க்க காரணம் என்ன? அப்போது ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை. இப்போது “நிச்சயம் வருவேன்” என்று சொல்லி விட்டார். ஆக, ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு மட்டுமே அவர் நீண்ட நாட்களாக சொல்லி வந்த நதி நீர் இணைப்பை, இரு கட்சிகளும் வாக்குறுதிகளாக அறிவிக்கக் காரணம். அதுதான் ரஜினிகாந்த் என்ற ஆளுமையின் சக்தி. வேறு யாரும் இதைப் பற்றி பேசியிருந்தால் இரண்டு கட்சிகளும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள்.
இதுவே ரஜினியின் பவர் தேர்தலில் போட்டியிடாமலே வெற்றி பெற்ற நதிகளின் நாயகன்
***********************************************************************
இதுபோன்ற நம்ம தலைவரின் செய்திகளை
உடனுக்குடன் வீடியோ நியூஸ் பெற இணையவும்