கமல் ஏன் இப்படி செய்கிறார்?" "எதற்க்காக கமல் இப்பொழுது அரசியலுக்கு வந்திருக்கிறார்?" "கமல் ரஜினியுடன் சேர்ந்து பயணிப்பாரா அல்லது எதிர்பாரா?" "கமல் ரஜினி மேல் உள்ள பொறாமையில் இப்படி செய்கின்றாரா? " .. இதற்கான பதிலை நாம் தெரிந்துகொள்வதற்கு முன் ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் பின்னணியையும் மற்றும் சினிமாவில் உள்ள அரசியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் . அக்காலத்திலிருந்து இக்காலம் வரையில் தமிழகத்தை பொறுத்த வரை சினிமாகாரர்கள் அரசியலில் இருந்து வருகிறார்கள் என்பது தவறு... சினிமாக்காரர்களை வளர்ப்பதே அரசியல்வாதிகள் தான் என்பதே நிதர்சனம்.. எம்ஜிஆர் திராவிடமும், சிவாஜி தேசியமும் கட்சியிலிருந்து வளர்த்தார்கள், இதை இப்படியும் பார்க்கலாம்.. திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கட்சி அவர்களை வளர்க்கும்... எப்படி? கட்சி பணத்தில் பினாமியாக தயாரிப்பாளர் படமெடுப்பார்... அதன் வழி கட்சி பணமும் சம்பாதிக்கும்.. தன் கொள்கைகளையும் பரப்பும்... இது எல்லோருக்கும் பொருந்தாது.. யாருக்கு திறமை இருக்கிறதோ... முதல் 10 15 படங்களில் யார் மக்கள் சக்தியை ஈர்க்கிறார்களோ அவர்களை தன் பக்கம் வலிக்கும் கட்சிகள்.. இதுவே தமிழ்நாட்டின் 65 வருட அரசியல்..முதல் சில படங்களில் நல்ல கதை மற்றும் பாத்திரத்தை மட்டுமே தேர்ந்த்டுத்து நடித்த நடிகர், பிரபலமானவுடன் கருத்து சொல்வதன் காரணமும் அவர் பின்னே இருக்கும் கட்சிகளே.. சினிமா மோகத்தை வளர்த்து, பிறகு நடிகர் வாயிலாக ஆட்சிக்கு வரும் தந்திரத்தின் சூத்திரதாரி திராவிட முன்னேற்ற கழகமே... இதில் எம்ஜிஆர் ... கட்சியால் அவரும்.. அவரால் கட்சியும் வளர்த்த பிறகு... அவர் தனியே கட்சி ஆரம்பித்து தான் வளர்த்த கட்சிக்கே ஆப்பு வைத்தது திமுகவின் படிப்பினை.. ஆதலால், அவர்கள் ரஜினியையோ கமலையோ கட்சியில் சேரும்படி வற்புறுத்தியதே இல்லை... ஜெயலலிதா என்றைக்குமே தன்னை தவிர யாரும் தேவையில்லை என்ற எண்ணத்தாலும் இவர்களை நெருங்க வில்லை... சினிமாவை பொறுத்த வரை எல்லாமே ஜாதி தான்.. தன்னுடைய ஜாதியை வளர்த்து விட தன் ஜாதி பசங்களை ஹீரோவாக இயக்குனர் அறிமுக படுத்துவார்... அல்லது தயாரிப்பாளர்.. பிறகு ஹீரோ வளர்ந்து தன் படத்தில் வரும் காமெடியன்.. சிறு வேட நடிகர்கள்.. போன்றவர்கள் மூலம் இங்கே ஜாதியையே பெரிதும் வளர்க்கிறார்கள்.. இதற்கும் மேலே போய் .. சில ஜாதி கட்சிகள் மற்றும் சங்கங்கள் அவர் ஜாதியில் உள்ள நடிகரை பினாமி வைத்து அவர்களே தயாரித்து அவரை தூக்கிவிடுவதுண்டு... அப்படி கிடைக்கும் லாபத்தில் அவர்கள் சமபங்காக பிரித்துக்கொள்வார்கள்... அந்த நடிகருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஒன்று கூடி அவரை காப்பாற்றுவார்கள்.. இது எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது ஜாதியே.. ஆக ஜாதி மதம் எல்லாம் மூட நம்பிக்கைன்னு உங்க ஹீரோ சொன்னால் நம்பிவிடாதீங்க... அவரை சொல்லவைப்பதே அவர் பின்னாலிருக்கும் ஜாதி சங்கங்கள்.. ஆக, ஜாதி இல்லையேல் தமிழ் சினிமாவில் வளருவது மிக கடினம்.. அதில் மிகவும் அவதி படுவது இரு கூட்டம்.. ஒன்று வேறு மாநிலத்திலிருந்து இங்கே நடிக்க வரும் .. அர்ஜுன், வினய், ஷாம், அபபாஸ் போன்ற கூட்டம்.. இவர்களுக்கு பின்புலம் கிடையாது, சில இயக்குனர்கள் மற்றும் தன் திறமையை நம்பியே நடிக்க வருகிறார்கள்.. ஆனாலும் பெரிய இடத்திற்கு செல்ல முடியாமல் இருக்கவும் இதுவே காரணம்... இரண்டு, பார்ப்பனர்கள்.. இவர்களுக்கு இவர்கள் ஜாதி எந்த உதவியும் செய்யாது.. நல்ல விதமாக சொல்ல வேண்டுமென்றால் தன் திறமையை மட்டுமே நம்பும் கூட்டமது.. வேறு விதமாக சொல்லவேண்டுமென்றால் அவர்கள் டிசைனே அப்படி.. இதற்க்கு சாலை சிறந்த உதாரணம் மாதவன்... பெரிய ஹிட்டுக்களை குடுத்த பிறகும் ஹிந்திக்கு செல்ல அதுவே காரணம்.. ஸ்ரீகாந்த், பிரசன்னா.. போன்றோர் பெரிதளவில் வராததற்கும் அதுவே காரணம்.. இதில் ரஜினி முதல் ரகத்தை சேர்ந்தவர்.. கமல் இரண்டாம் ரகத்தை சேர்ந்தவர்.. ரஜினி இப்படி வளருவாரென்று அவரை அறிமுகம் செய்த கேபி கூட அறிந்திருக்க மாட்டார்.. ரஜினியின் வளர்ச்சிக்கு ஒரே காரணம் அவரின் திறமை மட்டுமே.. அவர் பின்னால் ஜாதி கிடையாது.. ஆதலால் தன்னை நம்பி வரும் முதலாளிக்கு ஒன்றுக்கு பத்தாக பணம் கிடைக்கவேண்டுமென்ற வெறியுடன் உழைத்தால் மட்டுமே இந்த இடத்திற்கு வர முடிந்தது.. ஆனால்.. ஜாதி வெறி பிடித்த இந்நாட்டில் அப்படி வாழ முடியுமா? எல்லா இடத்திலிருந்தும் மிரட்டல்கள்.. காரணம் அதே தான்.. அவர் பின் ஜாதி இல்லை.. ஆகையால் ரஜினி தேசியத்தை வளர்த்தார் .. அதன் மூலம் வடக்கே உள்ளவர்களிடம் பெரும் பேரை சம்பாதித்தார்.. தேசியம் பேசினால் இந்தியா கைவிடாது.. அது காங்கிரஸ் ஆனாலும் சரி பாஜக ஆனாலும் சரி.. தேசியத்தை வரவேற்பார்கள்.. இதுவே ரஜினியின் யுக்தி மற்றும் அரசியல்.. மாறாக கமலுக்கு இங்கே இடம் வேண்டுமே... ஆகையால் அவர் கையிலெடுத்த ஆயுதம் திராவிடம்.. நாத்திகம்.. கமல் மற்றும் வாணி திருமண படங்களை கூகுல் செய்து பாருங்கள், நெற்றி நெறய பட்டை அடித்து தான் திருமணம் செய்தார்.. 34 வயதுக்கு பிறகே பெரியார்ஸ்ம் பேச தொடங்கினார்.. காரணம் அவர் பின்னாலிருந்த பார்ப்பன ஜாதி அவருக்கு உபயோகமில்லை.. மற்றும் ரஜினியின் வளர்ச்சி என்று வேண்டுமானாலும் தமக்கு ஆபத்தாக முடியலாம் என்று கருதிய திராவிட கட்சிகள் கமலை வளர்க்க தொடங்கியது.. எப்படி? படங்களை பினாமிகள் வைத்து தயாரித்தது.. அவார்டுகள் குடுத்து குவித்தது... அவரே உலகநாயகன், நடிப்புலகின் சித்தன் என்று மீடியாக்களை எழுத வைத்தது .. (குறிக்கவும் : அவருக்கு திறமை மற்றும் அழகு இருந்ததால் தான் அதை அவர்களால் செய்ய முடிந்தது.. இதை ஒற்று கொள்ளத்தான் வேண்டும்.. ) , அப்படியே அவர்களின் கொள்கைகளை பரப்ப செய்தது.. கமல் தன்னை ஒரு அறிவு ஜீவியாக ப்ராண்ட் செய்ததால்.. 'அவரே கடவுள் இல்லைனு சொல்றாரே'னு பாமரமக்களை வாய்பிளக்க செய்து, அதையே அரசியல் வாதி பேசும்போது 'இது ஒன்னும் புதுசில்ல, இது பகுத்தறிவு' னு மக்களை நம்பவைத்தனர்.. இது போக கமலின் படங்களுக்குள்ள மேல் தட்டு கூட்டம் தன்னையும் அறிவு ஜீவியாக பாவித்து, ரஜினியை கடைசி வரை கண்டக்டராகவே பார்த்தார்கள்.. அவர்களே இப்போதும் ரஜினியை கிண்டலடிப்பவர்கள்.. ஆக, எந்த பின்னணியும் இல்லாத கமல் இவ்வளவு வளர காரணமாக இருந்த (அவர் திறமை தவிர) திமுகவும்.. ரஜினி தேசியம் பேசிவருவதால் அதன் அபாயத்தை நன்கறிந்த திமுக நம்பியிருந்த கமலும் இப்பொழுது ஒன்று கூடி விட்டார்கள்.. இன்னும் சொல்லப்போனால் கமல் நன்றி கடனாக இதை திமுகவுக்கும், இதை எதிர்பார்த்த திமுக கமலிடம் சரண் என இது ஒரு வின் -வின் சிட்டுவேஷன்.. இதற்காக தான் கமல் இப்பொழுது இறங்குகிறார்.. சரி கமல் வெல்வாரா? கமல் படங்களே ஓப்பனிங் இல்லாத போது எப்படி வெல்வார்? அப்புறம் இது எதற்கு? சொல்கிறேன்.. 1. இவ்வளவு நாள் ரஜினி மட்டும் இறங்கி இருந்த நேரத்தில் இருந்த வேகம் என்ன? இப்போ கமலும் இறங்கியவுடன் ' அட போங்கப்பா எல்லா நடிகர்களும் வரிசையா வராங்க' னு ரஜினியின் அரசியலை சாதாரணமாக்குவது.. 2. ரஜினியை எதிர்த்து ஒரு குரல் கொடுக்காத சுடாலின்.. கமல் வந்தவுடன் "நடிகர்கள் வருவது அவர்களுக்கு நல்லதல்ல" என்று பொத்தாம்பொதுவாக ஆக்குவதற்காகேவே.. இதில் ரஜினியையும் சேர்த்து கூறினால் ஆன்டி-ஸ்டாலின் ஆகாது.. 3. கமல் ரசிகர்களின் வோட்டு மொத்தத்தையும் (சிறிய %) ஒரு சேர வாங்கி, திராவிட கட்சிகளுக்கு கொடுப்பது .. 4. ஜெயலலிதா இடத்தை ரஜினி எடுத்து கொள்ளாமல், கூட்டத்தில் ஒருவராக காண்பிக்க... இவையெல்லாம் சேர்ந்தே கமலின் அரசியல் யுக்தி.. கடைசியாக.. ரஜினி வெல்வாரா? என்பதே எல்லாருடைய கேள்வியும்.. கண்டிப்பாக வெல்ல ஒரு பெரிய வாய்ப்பிருக்கு, அவர் இன்னும் களத்தில் இறங்கவில்லை, இறங்கியவுடன் அவருக்கே உண்டான பில்டப்பை மீடியாக்கள் குடுக்கும், அவர் தினம் தலைப்பு செய்தியாவார்... தேர்தல் நெருங்க நெருங்க தெறிக்க விடுவார்.. கவலை வேண்டாம்...
பேட்ட பராக்
***********************************************************************
இதுபோன்ற நம்ம தலைவரின் செய்திகளை
உடனுக்குடன் வீடியோ நியூஸ் பெற இணையவும்
உடனுக்குடன் வீடியோ நியூஸ் பெற இணையவும்