தென்காசி மாநாடு பற்றி அண்ணாமலை சற்றுமுன் வெளியிட்ட பதிவு

தென்காசி நகரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்த மாவட்டத் தலைவர் திரு ராஜேஷ் ராஜா அவர்களுடன், தென்காசி நகர மக்களின் அன்பைப் பெற்ற தென்காசி நகரத் தலைவர் திரு மந்திரமூர்த்தி அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்தோம்.
காலில் செருப்பு கூட அணியாத எளிய மனிதரும் கடின உழைப்பாளியுமான திரு மந்திர மூர்த்தி அவர்கள் தென்காசிக்குக் கிடைத்த பொக்கிஷம். அற்புதமான வரவேற்பும் அன்பான உபசரிப்பும் அளித்த அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி.
தென்காசியில் அமைந்துள்ள அமர் சேவா சங்கம் அமைப்பிற்கு, மாவட்டத் தலைவர் திரு ராஜேஷ் ராஜா அவர்களுடன் சென்றிருந்தோம். 1981ஆம் ஆண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கி, நாற்பதாண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக நடத்தி வரும் பத்மஶ்ரீ திரு S. ராமகிருஷ்ணன் அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
தன் கல்லூரி இறுதி ஆண்டு காலத்தில் கடற்படை தகுதித் தேர்வின் போது முதுகுத்தண்டில் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட சோர்ந்து விடாமல் கிராமப் புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளர்கள் மேம்பாட்டிற்காக, பொதுச் சமூகத்தை உள்ளடக்கி இவர் செய்து வரும் பணிகள் போற்றுதலுக்குரியது.
இன்று, மாற்றுத்திறனாளர்களுக்கான விழிப்புணர்வு கண்காட்சியகம் மற்றும் உணவகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஐயா அவர்கள் தொடர்ந்து பல்லாண்டுகள் தன் சேவைப் பணிகளைத் தொடர வாழ்த்துக்கள்.இவ்வாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS