கோவை சம்பவம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட மாரிதாஸ் !

மாரிதாஸின் பரபரப்பு அறிக்கை :- கோவை சம்பவம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட மாரிதாஸ் ! கேஸ் சிலிண்டர் வெடிக்க 1.அதிகமாக Heat செய்து Steel உருக்கச் செய்வது 2.cylinderயை பலமாகச் சேதப்படுத்துவது. ஆனால் இது இரண்டும் அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. கோவையில் தீவிரவாதிகள் HomeMade Bombஆக கேஸ் சிலிண்டரை பயன்படுத்த முடியும் என்றால் இது பெரும் ஆபத்துக்கான தொடக்கம் இது. ஆக முதல் கேள்வி அந்த சிலிண்டர் வெடித்தது எப்படி? அடுத்து செய்தி நிறுவனங்களுக்கு ஏன் திமுக அரசின் காவல்துறை அவசரமாக கேஸ் சிலிண்டர் கார் வெடிப்பு என்று செய்தி கொடுத்து தீவிரவாத செயலை சாதாரண விபத்து போல் திசை திருப்ப ஆர்வம் காட்டியது ஏன்? ஏன் தீவிரவாத சம்பவத்தின் முன்னோட்டம்? வாகனம் பெட்ரோல் வாகனம் ஆனால் கேஸ் வாகனம் போல் செய்தியை பரப்பவிட்டது ஏன்? 2016துருக்கி அரசு உள்நாட்டில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் HomeMade Bomb ஆக சிலிண்டர் & ammonium nitrate இவை பயன்படுத்தி கார் வெடிக்கச் செய்து உயிர்ச் சேதம் ஏற்படுத்தியதாகக் கருதி பல கட்டுப்பாட்டுக்களை உருவாக்கியது. அதற்கும் இந்த கோவை சம்பவத்திற்கும் பெரிய வித்தியாம் இல்லை! சம்பவம் நடந்த 3, 4 மணி நேரத்தில் தமிழக காவல் ஆணையர் உட்பட முக்கிய உச்ச அதிகாரம் படைத்தவர்கள் கோவை விரைந்ததிலிருந்து நடந்திருப்பது விபத்து அல்லது அதையும் தாண்டி ஏதோ சதித் திட்டத்தின் முக்கிய பகுதி என அறியமுடிகிறது. ஆனால் செய்தி என்ன சதி! இந்த நிகழ்வுக்குக் காரணமானவன் முபினின் பயன்படுத்திய கார் 1998 கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் (அல்லும்பா தீவிரவாதி பாசாவின் சகோதரன்) மகன் கொடுத்தது, ஶ்ரீலங்கா குண்டுவெடிப்பில் விசாரிக்கப்பட்டவன், வீட்டில் 100கிலோ வெடிமருந்து கிடைக்கிறது ஆனாலும் இதைத் தீவிரவாத செயல் எனச் சொல்ல என்ன தயக்கம் அரசுக்கு? ஒரு வேளை வாகனம் எரிந்து விபத்து நடந்திருக்கலாம்? என்றால் அதற்கும் வாய்ப்பு இல்லை. வாகனம் வெடித்த கோவில் அவர் வீடும் ஒரே ஏரியா தான். வாகனம் வெறும் 2கிமீ கூட பயணிக்கவில்லை. அதிக தூரம் பயணித்து exhaust pipe ஆரம்பித்து radiator வரை பிரச்சனையாகி எரியும் அளவுக்குப் பயணமே அல்ல இது. அடுத்து இந்த கார் Engine Error, Design&Electrical issue என்று பல காரணம் உண்டு கார் எரிவதற்காக வாய்ப்புகளில். காரில் பயன்படுத்தப்படும் perfume வரை சொல்ல ஆயிரம் உண்டு அப்போதும் கார் குறைந்தது 15நிமிடம் வரை மெல்ல மெல்லப் பற்றி எரியும் ஒழிய வெடித்துச் சிதறாது. இதில் கார் முழுவதும் வெடித்துச் சிதறியுள்ளது. ஓட்டியவர் உள்ளேயே இறக்கிறார். கார் எரிவது விபத்து, இது விபத்தல்ல வெடிப்பு. இதில் ஆபத்தான விசயம் 100கிலோ வெடி மருந்தும், தீவிரவாத தொடர்பும் பின்புலமும் இருக்கும் இந்த விசயத்தை திமுகIT விங்க் நிர்வாகிகள் மத்திய அரசு சதி , ஆளுநர் சதி என்ற ரீதியில் உண்மையை மறைக்க ஏன் துடிக்கிறார்கள்? யாருக்காக? திமுக மாநில நிர்வாகிகள் இதை 2 நாட்களாகச் செய்கிறார்கள். திமுக 2009ஆம் ஆண்டு கோவைக் குண்டு வெடிப்பிற்குக் காரணமான தீவிரவாதிகளை அண்ணா நூற்றாண்டு விழ எனச் சொல்லி விடுதலை செய்தது. அன்றும் இன்றும் திமுக இதை ஓட்டு வங்கியாகப் பார்க்கிறது என்பது உண்மை. ஆனால் இன்றைய சம்பவம் அதை விடப் பல நூறு மடங்கு ஆபத்தானது. அன்று சோ கூறினார் இது தீவிரவாத அடிபப்டைவாதிகளுக்கு திமுக கொடுக்கும் ஊக்கம் என்று. அன்று கொடுத்த ஊக்கமே இங்கே வந்து நிற்கிறது! இறுதியாக ஏன் வெடிப்பு ஆள் நடமாட்டம் இருக்கும் போது செய்யாமல் காலை செய்தார்? உண்மை தான் இந்த வெடிப்பு மக்கள் கூடும் இடத்தில் நடந்திருந்தால் 40 முதல் 50 பேர் இறந்திருப்பர். ஆனால் அதற்காகவே இதை விபத்து என கடக்க முடியாது. இப்படி சிலர் துடிக்கிறார்கள். இந்த கார் நிகழ்வு ஒரு முன்னோட்டமாக இருக்கும். இறந்தவன் தீவிரவாத தொடர்பு, வெடித்த விதம், வீட்டில் 100கிலோ வெடி பொருள் என இத்தனை கிடைத்தும் இப்படி யோசிப்பது ஒரு வியாதி. திமுக தமிழகத்தை ஆபத்தில் தள்ளி அதில் அரசியலும் செய்கிறது.. ஆம அது என்ன ஈஸ்வரன் கோவில் அருகே அருகேனு செய்தி போடுகிறார்கள். கோவில் முன்னாடு தானே வெடிக்க செய்துள்ளனர் அதனால் கோவில் முன்பகுதி பலத்த சேதமாகியுள்ளது. கோவில் முன் வெடிப்பு என்று செய்தி போட என்ன கஷ்டம் இவனுகளுக்கு? இந்த லட்சணத்தில் சகிப்புதன்மை மத சார்பின்மை பாடம் எடுப்பது. ஊடகமும் திமுகவும் தமிழகத்தின் சாபம்.இவ்வாறு மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS