அதிமுக கதை முடிந்தது ! இனி இதான் வரலாறு

 அரசியலில் ஒவ்வொரு பலசாலி கட்சியை வீழ்த்தவும் இன்னொரு கட்சி உருவாகும் என்பது நியதி. இந்திய சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டில் பலமான காங்கிரஸை 20 ஆண்டுகளுக்குப்பின் திமுக (ஒரு பலமான கூட்டணியுடன்) வீழ்த்தியது. அதாவது, காங்கிரஸின் ஆதிக்கம் காங்கிரஸ் vs திமுக என்ற புள்ளிக்கு வந்து நின்றது. மீண்டும் காங்கிரஸுக்கு வாய்ப்பு கிட்டியிருக்கும்; ஆனால், இந்திரா செய்த "புண்ணிய" காரியத்தால் காங்கிரஸிலேயே ஒரு பிரிவு திமுகவுக்கு வெண்சாமரம் வீச, "காங்கிரஸ் vs திமுக" என்பது காமராஜரின் கடைசி பொதுத்தேர்தலோடு (1971) மாறிப்போனது.

அப்பொழுது திமுகதான் புதிய பலசாலி. இனி "திமுக vs ___" என்பதுதான் புதிய சூழல் என்றானது. காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸை தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த எதிரியும் இல்லை. மத்தியில் இந்திரா அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கும் வரை காமராஜரை இங்கே வீழ்த்துவது சிரமமில்லை என்பதால், "இனி குறைந்தது கால் நூற்றாண்டுக்கு நமது ஆட்சிதான்" என கலைஞர் கருணாநிதி கணக்கு போட்டிருக்கக்கூடும். 


அரசு நிர்வாகத்தில் தினுசு தினுசாக புதிய ஊழல்முறைகள் மக்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கிய சமயம் அது. அதே நேரம், அதே மக்கள் கலைஞர், இந்திரா அரசியல் கூட்டணியின் ஈர்ப்பில் மயங்கியும் இருந்தார்கள். அந்த நிலையில், பொதுவான அரசியல் பார்வையாளர்களும் திமுகவுக்கான மாற்று உருவாக வெகு காலம் பிடிக்கும் என்றே நினைத்திருப்பார்கள். 


ஆனால், அங்கேதான் காலம் ஒரு ஆச்சரியமான திருப்புமுனையை முன்வைத்தது.அண்ணாவின் அகால மரணத்திற்கு பிறகும் இரும்புக்கோட்டையாக நின்றிருந்த திமுகவை செங்குத்தாக உடைத்தார் எம்ஜிஆர். "திமுக vs ___" என்பதில் கோடிட்ட இடத்தை எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக வெகு விரைவில் நிரப்பியது. முதன்முதலாக ஆட்சியை பிடித்த 10 ஆண்டுகளில் திமுக அரியணையை இழந்ததோடுமட்டுமல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரத்தின் அருகில் செல்லக்கூட முடியாமல் தவித்தது. 


திமுக என்ற பலவானை எதிர்த்து நிற்க உருவான பலவான்தான் அதிமுக. ADMKவில் உள்ள A என்பது அதிகாரபூர்வமாக "Anna" என சொல்லப்பட்டாலும், அது உண்மையில் "Anti" என்பதே ஆகும்.ஆம், ADMK என்பது Anti DMK தான். திமுகவின் சித்தாந்தங்களை ஏற்க முடியாதவர்களுக்கு, திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரிக்க முடியாதவர்களுக்கு, திமுக திணிக்கும் வாரிசு அரசியல் பலகாரங்களை சுவைக்க முடியாதவர்களுக்கு, திமுகவின் அரசு நிர்வாகக் கோளாறுகளை சகிக்க முடியாதவர்களுக்குபலமான பிடியாக இருப்பது அதிமுகதான் என்பதில் மாற்று கருத்தில்லை. அந்த காரணத்தால்தான், தன் பலவீனங்கள், குறைகள், குற்றங்களை மீறி இன்னும் மக்கள் மத்தியில் அதிமுக திடமாக நிற்கிறது. அதனால்தான் கடந்த 55 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகால ஆட்சியை தன் வசம் வைத்து,திமுகவுக்கு சிம்மசொப்பனமாக அதிமுக விளங்குகிறது. 


"எந்த சித்தாந்தமும் இல்லாத கட்சி" என திமுகவால் பரிகசிக்கப்பட்டாலும், காலத்துக்கேற்ப மாறாத வறட்டு சித்தாந்தத்தை வைத்து மக்களை முரட்டுத்தனமாக அணுகாமல், மக்களுக்கான எளிய அரசியல் மொழியை அதிமுக பேசியது என்பதை மறுக்க இயலாது.எனவே, "திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்" என சொல்லும் மாற்று கட்சிகள் கூட அதிமுகவின் ஆதரவுத் தளத்தை தங்கள் வசப்படுத்தி, அதற்கும் ஒரு படி மேலே சென்று திமுகவை வீழ்த்தினால் மட்டுமே திமுக, அதிமுக இரண்டையும் வீழ்த்தமுடியும். அப்படி ஒரு பலமான கட்சி உருவாகும் வரை,அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, அதிமுகவுக்கு அழிவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.


எம்ஜிஆருக்கு பின், அதிமுகவின் தலைமையை மக்கள் ஆதரவுடன் கைப்பற்றிய ஜெயலலிதா ஒரு பேட்டியில் சொன்னார் - "எனக்கு பிறகு கட்சி தலைமைக்கு வாரிசு என யாரையும் நான் அறிவிக்கப்போவதில்லை.எம்ஜிஆர் யாரையும் அப்படி அறிவிக்கவில்லை. போட்டிகளுக்கிடையே போராடிதான் நான் இந்த இடத்திற்கு வந்தேன். அது போல எனக்கு பிறகும் ஒரு தலைவர் முட்டி மோதி மேலே வருவார்".

EPS vs OPS என்கிற இன்றைய அதிமுக தலைமை போட்டியை பார்த்து "அதிமுக அவ்வளவுதான்" என்பவர்களுக்கு ஜெயலலிதா அன்று சொன்ன பதில் இன்றும் பொருந்தும். முட்டி மோதி ஒருவர் மேலே வருவார். Anti DMK என்கிற அதிமுகவின் அடிநாதமான செங்கோலை உயர்த்திப் பிடித்து கோலோச்சுவார். சிறிதும் சந்தேகமில்லை.பொன்விழா காணும் அதிமுகவுக்கு நம் வாழ்த்துகள்!!! 


 



***********************************************************************
*********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
அல்லது

உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS