பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ரஜினியின் மவுனத்திற்க்கு இவர்கள்தான் காரணம் நீங்களே பாருங்கள்

 பொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் மவுனத்திற்கு இது தான் காரணமா?

பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கும் ரஜினிகாந்த், தேர்தல் நேரத்தில் தன்னுடைய கருத்துகளை, வழக்கம் போல் மீடியா திரித்து வெளியிட்டு பிரச்சினையை திசை திருப்பி விடக்கூடாது என்று யோசிக்கிறாராம்.

 நிர்மலா தேவி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக,  “இது வெட்கப்பட வேண்டிய விஷயம். விசாரணை நடந்து கொண்டிருக்குது. குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியவந்தால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,” என்று முழங்கிய ரஜினிகாந்த் பொள்ளாச்சி விவகாரங்கள் குறித்து மவுனம் சாதிப்பது ஏன் என்று ரஜினி ரசிகர்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

கல்லூரி மாணவிகளை நிர்மலா தேவி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தான் வழக்கு. தற்போது கல்லூரி மாணவிகள் உட்பட இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்முறையும், பலாத்காரமும் செய்துள்ளதாகத் தான் குற்றச்சாட்டு. நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் வரையிலும் பேசப்பட்டது. பொள்ளாச்சி விவகாரத்தில் துணை சபாநாயகர் பெயர் அடிபடுகிறது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், ஏன் ரஜினிகாந்த் அமைதி காக்கிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ரஜினிகாந்த் உண்மையில், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக, கடும் கோபத்தில் இருக்கிறாராம். ஜெயலலிதா பெயரில் நடக்கும் ஆட்சியில் எப்படி இப்படிப்பட்ட குற்றங்களை தொடர அனுமதித்தார்கள் என்று கோபத்தின் உச்சத்தில் தான் இருக்கிறாராம்.

அதே சமயத்தில் தேர்தல் அறிவிப்பும் வந்து விட்டதால், தான் ஏதாவது சொல்லப்போக, வழக்கம் போல் மீடியா அதைத் திரித்துக் கூறி தனது கருத்துக்கு அரசியல் சாயம் பூசி விடுவார்களோ என்பதால் தான் அமைதி காக்கிறாராம். உண்மை தானே, அவர் சொல்வதை அப்படியே தமிழ் மீடியாக்கள்  சொல்லாமல் திரித்துக் கூறியே பழக்கப்பட்டுவிட்டார்கள் தானே. மேலும், யாருக்கும் ஆதரவு இல்லை என்ற கருத்திலும் மாறுபாடு இல்லையாம்.

என்னதான் கமல் ஹாசன் சொல்லி வந்தாலும்,  “ஆதரவு” என்ற வார்த்தை மட்டும் ரஜினிகாந்த் வாயிலிருந்து வரப்போவதில்லை என்கிறார்கள். பொள்ளாச்சி விவகாரம் ஏற்கனவே அரசியலாக்கப்பட்டு விட்ட நிலையில் மேற்கொண்டு ஏதாவது சொன்னால், நிச்சயம் அரசியல் ஆக்கி விடுவார்கள். யாராவது ஒரு சாராருக்கு ஆதரவு என்று மீடியா திரித்து விடுவார்கள் என்று, தேர்தல் முடியும் வரை பொறுமையாக இருக்கிறாராம்.

அதே சமயத்தில் பொள்ளாச்சி வழக்கு விசாரணை எப்படிப் போகிறது என்பதையும் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம்.  சிபிஐ விசாரணைக்கான ஆவணத்தில்  பாதிக்கப்பட்ட பெண் பெயரை குறிப்பிட்டதும், ரஜினிகாந்துக்கு கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஏதாவது காரணத்திற்காக விசாரணை முடக்கப்பட்டு விட்டால்,  பொள்ளாச்சி பெண்களுக்காக, பொதுவெளிக்கு வந்து ரஜினிகாந்த் போராடவும் தயங்க மாட்டார் என்கிறார்கள், ரஜினிக்கு வேண்டியவர்கள். இரண்டு பெண்களைப் பெற்றவர், எப்போதும் பெண்களுக்கு ஆதரவாகவே இருப்பார் என்றும் அடித்துச் சொல்கிறார்கள் அவருடைய நம்பிக்கைக்குரியவர்கள்.

ஆக, ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் திரித்துப் பேசும் மீடியாக்களும், தேர்தல் நேரமும் தான் அவர் அமைதி காப்பதன் ரகசியம் என்று தெரிகிறது.



3 comments:

  1. Mela thalaivar kooda irukkurathu yaaru bro....???

    ReplyDelete
    Replies
    1. மாரிதாஸ் அண்ணன் நண்பா

      Delete
  2. தலைவர் எந்த முடிவு செய்தாலும் அதில் ஒர் அரத்தம் இருக்கும் மாரிதாஸ் ரங்கராஜ் பாண்டே விடியோக்களை இளைஞர்கள் கண்டிபாக பார்கவேண்டும் நல்ல ஆழ்ந்த சிந்தனை செய்ய கூடிய கருத்துக்களை சொல்பவர்கள் இவர்கள் தலைவருடன் சேர்ந்தால் மிகுந்த பக்கபலமே எல்லாம் நல்லதே நடக்கும் காத்திருப்போம்

    ReplyDelete

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS